குஜராத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜியோ 5ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

November 26, 2022

குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜியோ 5ஜி இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி இணைப்பு பெற்ற முதல் மாநிலமாக குஜராத் அமைந்துள்ளது. குஜராத்தில் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற அறக்கட்டளை மூலம், 100 பள்ளிகளுக்கு 5ஜி இணைய சேவை வழங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கல்வி துறையைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை, வேளாண் துறை மற்றும் தொழில் துறையிலும் 5ஜி இணைப்பை ஜியோ நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை […]

குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜியோ 5ஜி இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி இணைப்பு பெற்ற முதல் மாநிலமாக குஜராத் அமைந்துள்ளது.

குஜராத்தில் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற அறக்கட்டளை மூலம், 100 பள்ளிகளுக்கு 5ஜி இணைய சேவை வழங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கல்வி துறையைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை, வேளாண் துறை மற்றும் தொழில் துறையிலும் 5ஜி இணைப்பை ஜியோ நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவு தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் 5ஜி இணைப்பை கொண்டு சேர்ப்பதே ஜியோ நிறுவனத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu