பெங்களூரில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் இயங்கி வந்த ஹோட்டலில் எட்டு நாட்களுக்கு முன்பு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
கடந்த ஒன்றாம் தேதி கர்நாடகாவின் பெங்களூர் நகரில் ஒயிட் ஃபீல்டு அருகே குந்தல
ஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஹோட்டலில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வழியே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் இந்த வழக்கு விசாரணை ஆனது என். ஐ. ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வைத்த சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் அளிப்பவர்கள் க்கு 10 லட்சம் பரிசு என அறிவித்திருந்தது. இந்த நிலையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.