தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது. கடந்த ஆண்டு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது, ஆனால் இந்த ஆண்டில் 5 நாட்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டித்து, அக்டோபர் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.