பசுமை ஹைட்ரஜன் வர்த்தகத்துக்காக, கோவா ஹோல்டிங்ஸ் உடன் அதானி குழுமம் 50:50 கூட்டணி

September 15, 2023

அதானி குழுமத்தை சேர்ந்த அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் சிங்கப்பூர் பிரிவு, கோவா ஹோல்டிங்ஸ் ஏசியா பிரைவேட் லிமிடெட் உடன் 50:50 கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பான், தைவான், ஹவாய் ஆகிய பகுதிகளில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா விற்பனையை முன்னிறுத்தி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பசுமை ஹைட்ரஜன் வர்த்தகத்தில், அதானி நியூ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் குஜராத் பகுதியில் இதற்கான பிரத்தியேக ஆலை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் […]

அதானி குழுமத்தை சேர்ந்த அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் சிங்கப்பூர் பிரிவு, கோவா ஹோல்டிங்ஸ் ஏசியா பிரைவேட் லிமிடெட் உடன் 50:50 கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பான், தைவான், ஹவாய் ஆகிய பகுதிகளில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா விற்பனையை முன்னிறுத்தி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பசுமை ஹைட்ரஜன் வர்த்தகத்தில், அதானி நியூ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் குஜராத் பகுதியில் இதற்கான பிரத்தியேக ஆலை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவில் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், கோவா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, பசுமை ஹைட்ரஜன் துறையில் அதானி குழுமத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu