பழனியில் பொதுமக்கள் கேமரா,கைப்பேசிகளை பாதுகாக்க கட்டணம் வசூல்

பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பக்தர்களின் செல்போன், கேமராவை பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் கோவிலில் மூலவரை கருவறை வரை சென்று படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் அனுமதியின்றி அங்கு கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் அரசு அக்டோபர் 1ம் தேதி முதல் […]

பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பக்தர்களின் செல்போன், கேமராவை பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் கோவிலில் மூலவரை கருவறை வரை சென்று படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் அனுமதியின்றி அங்கு கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் அரசு அக்டோபர் 1ம் தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும் . இவற்றிற்கு கட்டணமாக செல்போனுக்கு ரூபாய் 5 வசூலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதனை தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் . மேலும் இதற்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

0
0
பகிர:
1 2 3 532

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu