போக்சோ வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு பிடிவாரன்ட்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயந்திரா கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். எடியூரப்பா தனது வீட்டிற்கு உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை […]

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயந்திரா கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். எடியூரப்பா தனது வீட்டிற்கு உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்ததாக அவரது தாயார் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் புகார் அளித்த சிறுமியின் தாயார் மர்ம மரணம் அடைந்தார்.

இந்த வழக்கில் சிஐடி தரப்பிலிருந்து எடியூரப்பாவை கைது செய்ய அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில் தற்போது எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu