முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இளநிலை மருத்துவப்படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் பிளஸ் டூ முடித்த மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.