ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு ஒலிம்பிக் அணிவகுப்பு மறுப்பு

2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் தொடக்க அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. பாரிஸில் ஜூலை மாதம் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது. வழக்கமாக அரங்கில் நடைபெறும் அணிவகுப்பு இந்த முறை சென் ரிவர் பகுதியில் ஒலிம்பிக் அணிகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும் இதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் 2022-ல் […]

2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் தொடக்க அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

பாரிஸில் ஜூலை மாதம் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது. வழக்கமாக அரங்கில் நடைபெறும் அணிவகுப்பு இந்த முறை சென் ரிவர் பகுதியில் ஒலிம்பிக் அணிகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும் இதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இரு நாடுகளில் இருந்தும் இந்த போட்டிகளுக்கு தேர்வான வீரர்கள் நாட்டின் கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் சுயேச்சை வீரர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு தவிர்த்து மற்ற தொடக்க நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கமிட்டி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu