இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1.52 லட்சம் கோடி நிதி வேளாண் துறை சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் பின்வருமாறு:
1. விவசாயத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்படும் 400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும்
2. காலநிலை மாற்றத்தை தாங்கும் திறன் கொண்ட 109 பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்படும்
3. ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
4. நாடெங்கும் 10000 இயற்கை உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்
5. வேளாண் துறை சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு அதிகரிக்கப்படும்
6. எண்ணெய் தயாரிப்புக்கான விவசாய பொருட்கள் துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கான உத்திகள் வகுக்கப்படும்.