ஆந்திரா அரசு கேரள நிலச்சரிவுக்கான 10 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து, ஆந்திரா முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கேரள அரசுக்கு ரூ.10 கோடி நன்கொடை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, தெலுங்கு திரையுலகின் பிரபலங்கள் பிரபாஸ், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நிதியுதவிகளை வழங்கியிருந்தனர். மேலும், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாக கேரள முதல்வரிடம் நிதி வழங்கியுள்ளனர்.