உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் தமிழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5,351 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டும் 537 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டான்போர்ட் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ், விஐடி, எஸ்ஆர்எம் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, சிதம்பரனார் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.செல்வம் நான்காவது முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தமிழக விஞ்ஞானிகள் இவ்வாறு உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு, அவர்களுக்கு கிடைக்கும் ஆராய்ச்சி வழிகாட்டுதல் மற்றும் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களுக்கு போதுமான பெல்லோஷிப்கள் கிடைப்பதில் இன்னும் சில சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது.