பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்றம்

November 7, 2022

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அப்போது, […]

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தனது தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறியுள்ளார்.

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், 50 சதவீத உச்ச வரம்பை 10 சதவீத இட ஒதுக்கீடு மீறவில்லை. சமூக சமத்துவத்துக்கு எதிராக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது என்றும், நீதிபதி பர்வாலா, ஆதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெலா திரிவேதி, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீட்டு முறை பற்றி நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu