ஆஸ்திரேலியாவில் கனமழை - 100 விமானங்கள் ரத்து

April 6, 2024

ஆஸ்திரேலியாவில் கடும் மழை பெய்து வருவதால் சுமார் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து […]

ஆஸ்திரேலியாவில் கடும் மழை பெய்து வருவதால் சுமார் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ரெட் பென் ரயில் நிலையத்தில் பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு ரெயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் மற்றும் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்கள் தேவையில்லாமல் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. சில இடங்களில் 300 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் முழுக்க கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu