5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி 

November 28, 2022

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு பெற்றவர்களில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் நபர்களின் விவரமும், சொந்த வீட்டில் குடியிருக்கும் நபர்களின் விவரமும் அரசிடம் இல்லை. 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். டிசம்பர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்கும் […]

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு பெற்றவர்களில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் நபர்களின் விவரமும், சொந்த வீட்டில் குடியிருக்கும் நபர்களின் விவரமும் அரசிடம் இல்லை. 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். டிசம்பர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். இலவச மின்சாரம் ரத்தாகும் என பரவும் தகவல் தவறானது. விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu