திருப்பதியில் வாணி அறக்கட்டளை மூலம் ரூபாய் 1000 கோடி வருவாய்

September 4, 2023

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது  பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கி அதன் மூலம் வரும் வருவாயில் பழமையான கோவில்களை புதுப்பிக்கவும், புதிய கோவில்களை கட்டவும் உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின் அக்டோபர் மாதம் முதல் வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வந்தனர். இதில் சிறப்பு தரிசனத்திற்காக கட்டணம் ரூபாய் 10000 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் […]

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது  பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கி அதன் மூலம் வரும் வருவாயில் பழமையான கோவில்களை புதுப்பிக்கவும், புதிய கோவில்களை கட்டவும் உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின் அக்டோபர் மாதம் முதல் வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வந்தனர். இதில் சிறப்பு தரிசனத்திற்காக கட்டணம் ரூபாய் 10000 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை  970 கோடிகள்  வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருவாயை வங்கிகளில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்ததில் ரூபாய் 36 கோடி ரூபாய் வட்டி கிடைத்துள்ளது. இதனால் இதன் மொத்த வருமானம் ரூபாய் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த பணத்தில் இதுவரை சுமார் 176 பழமையான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 2273 பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வசிப்பு பகுதிகளில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 51 கோவில்களில் தினமும் பூஜை செய்ய மாதம் ரூபாய் 5000 வழங்கப்பட்ட வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu