நாளை முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்

March 25, 2024

தமிழகத்தில் நாளை முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இதன் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் 12616 பள்ளியிலிருந்து 9.10 லட்சம் மாணவ மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட்ட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, […]

தமிழகத்தில் நாளை முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இதன் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் 12616 பள்ளியிலிருந்து 9.10 லட்சம் மாணவ மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட்ட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,700 ஆசிரியர்கள் அரை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். மேலும் தேர்வுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்மாராட்டம் செய்வது, அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. மே பத்தாம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu