கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 11 மாத உச்சமாக பதிவாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 11.9% உயர்ந்து 4140 கோடி டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் பதிவாகும் அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். குறிப்பாக, பொறியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 15.9% , மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 54.81% , ரசாயன பொருட்கள் ஏற்றுமதி 33.04% , மருந்து பொருட்கள் ஏற்றுமதி 22.24% , பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி 5.08% அளவில் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு உயர்ந்தாலும், ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி பிப்ரவரி மாதத்தில் விரிவடைந்துள்ளது. தங்கம் இறக்குமதி இதன் முக்கிய பங்களிப்பாளராக இருந்தது.