தமிழகத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரெயில் சேவை
தமிழகத்தில் செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது மலை,குகை பகுதிகளிலும்,பாகங்களிலும் சுமார் 34 கி.மீ. தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூர் மற்றும் செங்கோட்டையில் துணை மின் நிலையங்கள் கட்டப்பட்டன. அதன்படி இந்த வழித்தடங்களில் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அனைத்து ரெயில்களும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. சென்னை-கொல்லம், நெல்லை-பாலக்காடு, மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ்கள் மற்றும் நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் ஆகியவை மின்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த மின் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.