ஹைதியிலிருந்து முதல் கட்டமாக 12 இந்தியர்கள் மீட்பு

March 22, 2024

ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன. கரீபிய நாடான ஹைதியில் ஆயுத குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சர்வதேச விமான நிலையம், காவல் நிலையம் போலீஸ் […]

ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன.

கரீபிய நாடான ஹைதியில் ஆயுத குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சர்வதேச விமான நிலையம், காவல் நிலையம் போலீஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன. அவ்வகையில் இந்தியா ஆபரேஷன் இந்திராவதி திட்டத்தின் மூலம் 12 இந்தியர்களை முதல் கட்டமாக ஹைதியிலிருந்து டொமினிக்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu