மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 12 பேர் பலியாகினர்.
மடகாஸ்கரின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தெரிவித்துள்ளார். எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.