பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு சரிந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவின் இடிபாடுகளை அகற்றும் மீட்பு பணிகள் நடக்கிறது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் தற்போது கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.