சென்னையில் இருந்து 1265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து வரும் 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் வரும் 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7 ஆம் […]

சென்னையில் இருந்து வரும் 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் வரும் 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7 ஆம் தேதி 835 பேருந்துகளும், 8 ஆம் தேதி 570 பேருந்துகளும் இயக்க உள்ளன. அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு இந்த இரண்டு நாட்களிலும் 160 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பத்தாம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்க இருப்பதால் 9ம் தேதி வேறு மாநிலங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு 705 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu