எத்தியோப்பியாவில் கடுமையான நீலச்சரிவு ஏற்பட்டதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இங்கே உள்ள தொலைதா மாகாணத்தில் கிண்டோ டிடே என்னும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீட்பு படையினர் இப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோரை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.