மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.