ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி, தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில், ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, இன்று காலை முதல் ஆகஸ்ட் 21 காலை 10 மணி வரை, 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை மற்றொரு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, நெல்கட்டும்செவல் பகுதியில் நடைபெற உள்ள பூலித்தேவரின் 308வது பிறந்த நாளை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.