பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 15 கம்பெனி துணை ராணுவ படை வருகை

பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ள நிலையில் 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது. இதில் 90 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் […]

பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட உள்ளனர். இதில் முதல் கட்டமாக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ள நிலையில் 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது. இதில் 90 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை தவிர இன்றும், நாளையும் சென்னைக்கு துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். அவ்வகையில் இன்று கோவை மாவட்டத்திற்கு 500க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய ஐந்து கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் வருகை தருகிறார்கள் அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி,போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர். மேலும் அங்கு அவர்கள் தங்குவதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu