வதந்தியால் ஏற்பட்ட கலவரம் - பப்புவா நியூ கினியாவில் 15 பேர் பலி

January 12, 2024

பப்புவா நியூ கினியா நாட்டில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு சம்பள குறைப்பு செய்யப்படுவதாக போலியான செய்தி பரவியது. இதையடுத்து, பப்புவா நியூ கினியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தலைநகர் மோர்ஸ்பியில் உள்ள கடைகளை பலரும் சூறையாடத் தொடங்கினர். இதில் கலவரம் […]

பப்புவா நியூ கினியா நாட்டில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு சம்பள குறைப்பு செய்யப்படுவதாக போலியான செய்தி பரவியது. இதையடுத்து, பப்புவா நியூ கினியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தலைநகர் மோர்ஸ்பியில் உள்ள கடைகளை பலரும் சூறையாடத் தொடங்கினர். இதில் கலவரம் வெடித்து, உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அரசாங்கம், ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என விளக்கம் அளித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu