ஆப்கானிஸ்தானில் 15 மில்லியன் மக்கள் உணவின்றி பாதிப்பு

August 18, 2023

ஆப்கானிஸ்தானில் 15 .5 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் 15 .5 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை அந்நாட்டு […]

ஆப்கானிஸ்தானில் 15 .5 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் 15 .5 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை அந்நாட்டு மக்களின் தேவைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்வதாக அது கூறியது.

இது குறித்து தலிபான் பொருளாதார அமைச்சகம் கூறுகையில், வளர்ச்சித் துறைக்கு சர்வதேச உதவி வழங்கப்படவில்லை என்றது. ஆப்கானிஸ்தானுக்குள் கோதுமை விநியோகத்திற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துடன் (UNWFP) இந்திய அரசாங்கம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள UNWFP மையங்களுக்கு இந்தியா மொத்தம் 47,500 MT கோதுமையை வழங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (UNWFP) நாட்டில் உள்ள 16 மில்லியன் மக்களுக்கு உயிர் காக்கும் உணவை வழங்க இந்தியா உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu