கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை 15 சதவீதம் வரை வழங்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அலுவலக உதவியாளர்கள் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த 10 நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு, வீட்டு வாடகை மற்றும் நகர ஈட்டுப்படியையும் உயர்த்தி வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.