கொல்கத்தாவில் டிராம் சேவைகள், போக்குவரத்து நெரிசலால், அரசால் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் செயல்பட்டு வந்த டிராம் சேவைக்கு முடிவு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் ஆட்சியில் பிரபலமான இந்த சேவை, தற்போது கொல்கத்தாவில் மட்டுமே உள்ளது. பேருந்துகள் வந்த பிறகு, டிராம் சேவைகள் குறைந்து விட்டன, ஆனால் கொல்கத்தாவில் இதன் பாரம்பரியம் தொடர்ந்தது. தற்போது, போக்குவரத்து நெரிசலால், அரசு இதனை நிறுத்த முடிவெடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகள், மேற்கு வங்க மாநிலத்தில் அந்நிறுவனத்தின் தொடர்ச்சி சாத்தியமில்லை என தெரிவித்தனர். ஆனால், மைதான் முதல் எஸ்பிளனேட் வரை உள்ள வழித்தடம் மட்டும் தொடரும் என்று கூறப்பட்டது. இதற்கு எதிராக, டிராம் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.