தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 18 வயதில் நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 1500 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஆண்டு 800 கோடி செலவிடப்படும் என்றும் இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள் என்றும் இமாச்சல அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.