இ-நக்கெட்ஸ் செயலி மூலம் ரூ.17 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
இ-நக்கெட்ஸ் என்ற செல்போன் செயலி மூலம் மோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமீர்கான் உள்ளிட்ட சிலர் மீது பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
ஆரம்பத்தில் போனஸ் வழங்கி மக்களிடம் நம்பிக்கையை பெற்று, பின்னர் மக்களின் பணம் அதிகரிக்க ஆரம்பித்த உடன் செயலியை செயலிழக்க செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்றும், இதுபோல் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் பல இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.