வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு-மத்திய அரசு

வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன் தேதியிட்ட ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய […]

வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன் தேதியிட்ட ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள். இந்த ஊதிய உயர்வானது கடந்த நவம்பர் 22 ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. அதேபோன்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் பணி குறித்த கோரிக்கையும் பரிசீலனையில் இருப்பதாகவும், அவ்வகையில் வங்கிகளை மாற்றி அமைக்கப்பட்ட வேலை நேரம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியான பிறகு இது அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu