டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு குவிந்த 20 லட்சம் விண்ணப்பங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களுக்காக அறிவிப்பை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,கிளார்க் உள்ளிட்ட 6244 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களுக்காக அறிவிப்பை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,கிளார்க் உள்ளிட்ட 6244 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் அதிகமானோர் விண்ணப்பிப்பர். அவ்வகையில் நடப்பு ஆண்டுக்கான 6,244 காலிப்பணியிடங்கள் சுமார் 20 லட்சத்து 27 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு போட்டிக்கு 326 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்வானது வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடக்க உள்ளது. இதற்கு முன்பு வெளியான 2022 ஆம் ஆண்டு அறிவிப்பில் 7500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu