பெங்களூரில் குடிநீரை வீணடித்ததாக 22 குடும்பங்களுக்கு அபராதம்

March 26, 2024

பெங்களூரில் கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை வீணடித்ததால் 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் 22 வீடுகளில் இருந்து ரூபாய் 1.1 லட்சம் அபராதம் வசூலித்தது. இவை தவிர நகரின் பல்வேறு […]

பெங்களூரில் கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை வீணடித்ததால் 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

பெங்களூரில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூர் நீர்
வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் 22 வீடுகளில் இருந்து ரூபாய் 1.1 லட்சம் அபராதம் வசூலித்தது. இவை தவிர நகரின் பல்வேறு பகுதிகளில் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள் ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும் பொழுது கூடுதலாக 500 ரூபாய் அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu