சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தை வழிமறித்து ஒரு கும்பல் திடீரென துப்பாக்கி சூடு நிகழ்த்தியது இதில் 23 பேர் உயிரிழந்தனர்.
சிரியா சிரியா-ஈராக்கில் ஒரு ஸ்தரமற்ற அரசியலமைப்பு நிலவி வருகிறது. 2011 ஆம் வருடம் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து இருந்தது. இந்த அமைப்பின் தலைவர் 2019-யில் கொல்லப்பட்டார். இருப்பினும் இதன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மறைந்து ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிரியா நாட்டு வீரர்கள் சிரியா எல்லைக்கருகே பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். பேருந்தை திடீரென்று வழி மறித்த ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தின. இதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சிரியா அரசாங்கம், ராணுவ அரசாங்கமும் கருத்துக்கள் எதும் தெரிவிக்கவில்லை.