சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

April 29, 2023

சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இதனை தொடர்ந்து, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், […]

சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இதனை தொடர்ந்து, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது. இதன்படி விமானத்தில் 231 இந்தியர்கள் இன்று சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu