ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் மோசமான வானிலைக்கு 233 பேர் பலி

ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் மோசமான வானிலைக்கு 233 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த வானிலை மாற்றம் மற்றும் சேதம் குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மோசமான வானிலை மாற்றம் 32 மாநிலங்களை பாதித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்ச தீவிர வானிலை நாட்கள் தலா 30, இமாச்சல பிரதேசம் 28, பீகார், மத்திய பிரதேசத்தில் தலா 27 […]

ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் மோசமான வானிலைக்கு 233 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த வானிலை மாற்றம் மற்றும் சேதம் குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மோசமான வானிலை மாற்றம் 32 மாநிலங்களை பாதித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்ச தீவிர வானிலை நாட்கள் தலா 30, இமாச்சல பிரதேசம் 28, பீகார், மத்திய பிரதேசத்தில் தலா 27 நாட்கள் பதிவாகியுள்ளன. இதனால் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 233 பேர் பலியாகி விட்டனர். 9.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. 2022ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 86 பேர் பலியானார்கள். 30 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu