கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை

April 15, 2024

கனடாவில் வான்கூவர் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவின் வான்கூவர் நகரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டு காவல்துறை கூறி இருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை வான்கூவர் பகுதியில் வசிக்கும் மக்கள் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அங்கு நடைபெற்றதாக காவல்துறைக்கு தகவல் தந்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்றபோது கார் ஒன்றில் சிராக் அந்தில் என்ற இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். உடனே அவரைக் கண்ட […]

கனடாவில் வான்கூவர் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவின் வான்கூவர் நகரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டு காவல்துறை கூறி இருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை வான்கூவர் பகுதியில் வசிக்கும் மக்கள் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அங்கு நடைபெற்றதாக காவல்துறைக்கு தகவல் தந்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்றபோது கார் ஒன்றில் சிராக் அந்தில் என்ற இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். உடனே அவரைக் கண்ட இதனைத் தொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இவரை கொலை செய்தது யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிராக் அந்தில். சோனிபத் மாவட்டத்தில் அவருடைய குடும்பத்தார் வசிக்கின்றனர். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் படிப்புக்காக வான்கூவர் சென்றதாக கூறப்படுகிறது. அவர் அண்மையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். கனடாவில் நுழைவு விசா பெற்று பணி செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து சிராக்கின் குடும்பத்தினர் கூறுகையில், சிராக்கிற்கு எவருடனும் பகை இருந்ததில்லை. அவருடைய சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu