டெல்லியில் 25-ந்தேதி முதலமைச்சர் மற்றும் பிரதமர் சந்திப்பு

September 20, 2024

டெல்லியில் 25-ந்தேதி முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 118.09 கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டத்திற்கான செலவு 63,246 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு பல முறை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து தேவையான நிதியை […]

டெல்லியில் 25-ந்தேதி முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 118.09 கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டத்திற்கான செலவு 63,246 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு பல முறை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து தேவையான நிதியை கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி 24-ந்தேதி, அவர் டெல்லி செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 25- ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu