ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழில் அதிபர் தவ்வூர் ராணா கைது செய்யப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து பயங்கரவாதி ராணா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை அங்கு நடைபெற்று வந்திருந்தது. இதில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் அமெரிக்கா - இந்தியா இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் ராணாவை நாடு கடத்த அனுமதிக்கிறது. எனவே ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.