21 மாநிலங்களில் 26 புதிய நகரங்கள் உருவாக்க பரிந்துரை

March 28, 2023

தமிழ்நாட்டில் திருமழிசை உள்பட 21 மாநிலங்களில் இருந்து 26 புதிய நகரங்களை உருவாக்க பரிந்துரை வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் நாட்டில் நகர்ப்புற விரிவாக்கத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நகரங்களை உருவாக்க 21 மாநிலங்களிடமிருந்து 26 பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் 15 வது நிதி ஆணையம் 8 புதிய நகரங்களை உருவாக்க ரூ. […]

தமிழ்நாட்டில் திருமழிசை உள்பட 21 மாநிலங்களில் இருந்து 26 புதிய நகரங்களை உருவாக்க பரிந்துரை வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் நாட்டில் நகர்ப்புற விரிவாக்கத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நகரங்களை உருவாக்க 21 மாநிலங்களிடமிருந்து 26 பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் 15 வது நிதி ஆணையம் 8 புதிய நகரங்களை உருவாக்க ரூ. 8,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் ஒரு மாநிலம் ஒரு புதிய நகரத்தை மட்டுமே உருவாக்க முடியும்.

வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் உள்ள சிறிய நகர்ப்புற மக்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு இரண்டு புதிய நகரங்களுக்கு தலா ரூ. 500 கோடி வீதம் ரூ.1,000 கோடி முன்மொழியப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் திருமழிசை நகரம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu