27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

March 16, 2024

பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது. பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை […]

பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். அவ்வகையில் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி 27 வேட்பாளர்களின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது. இனி இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் அடங்கிய இந்த பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu