ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 54.11% வாக்குகள் பதிவானது.
ஜம்மு-காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 18-ந்தேதி முதற்கட்டத்திற்கான தேர்தலில் 61% வாக்குகள் பதிவானது, நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 54.11% வாக்குகள் பதிவானது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பகுதியில் 79.95% வாக்குகள் பதிவானது.