ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 2-வது கட்டமாக இன்று 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 25.78 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்கிறார்கள். பிரதமர் மோடி, முதன்முறையாக வாக்களிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார், இத்தருணத்தில், அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.