தமிழகத்தில் தேர்தல் பணிக்கு 3.32 லட்சம் பணியாளர்கள்

தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக 3.32 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தற்போது பதினைந்து கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். அதில் சென்னை மாநகராட்சியில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்களும், கோவை சரகம், காஞ்சிபுரம் சரகம், வேலூர் சரகம், விழுப்புரம் சரகம், சேலம் சரகம், திருச்சி சரகம், மதுரை சரகம், ஆவடி,தாம்பரம் ஆகிய இடங்களில் தலா ஒரு கம்பெனி துணை ராணுவப்படையினர் பிரித்து […]

தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக 3.32 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தற்போது பதினைந்து கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். அதில் சென்னை மாநகராட்சியில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்களும், கோவை சரகம், காஞ்சிபுரம் சரகம், வேலூர் சரகம், விழுப்புரம் சரகம், சேலம் சரகம், திருச்சி சரகம், மதுரை சரகம், ஆவடி,தாம்பரம் ஆகிய இடங்களில் தலா ஒரு கம்பெனி துணை ராணுவப்படையினர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் பெறப்பட்டதும் அவர்களுக்கான பயிற்சிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் முதல் கட்ட சரிபார்த்தல் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக வாக்கு பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்பட உள்ளன. அதை தொடர்ந்து மீண்டும் அவை சரிபார்க்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu