காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
காசாவில் 10 மாத குழந்தை டைப் 2 போலியோவால் பாதிக்கப்பட்டு, அதன் கால் செயலிழந்ததாக ஐ.நா. உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து 10 வயதிற்குட்பட்ட 90% குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ நோய் தடுப்புக்கான மருந்துகள் வழங்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், பெரும் அளவில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டன. பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. 3 கட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. வரும் 9 ஆம் தேதி வரை மத்திய காஸாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு இந்த முகாம் நடைபெறும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த இடைநிறுத்தங்களை போர்நிறுத்தமாகக் கருதக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.