அமெரிக்கா - ராணுவ பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

April 29, 2023

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணம் ஹீலி பகுதியில், வழக்கமான ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராணுவத்திற்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. ஒன்றோடு ஒன்று நேருக்கு நேராக மோதியதில், இரு ஹெலிகாப்டர்களும் கீழே விழுந்து முழுவதுமாக நொறுங்கி உள்ளன. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் […]

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணம் ஹீலி பகுதியில், வழக்கமான ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராணுவத்திற்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. ஒன்றோடு ஒன்று நேருக்கு நேராக மோதியதில், இரு ஹெலிகாப்டர்களும் கீழே விழுந்து முழுவதுமாக நொறுங்கி உள்ளன. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில், அண்மைக்காலமாக, ராணுவ ஒத்திகையின் போது விபத்து நேர்வது அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu