பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து - 31 பேர் பலி

March 31, 2023

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியாகினர். பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தக் கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அலறிய பயணிகள் பலர் கடலில் குதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த […]

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தக் கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அலறிய பயணிகள் பலர் கடலில் குதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கப்பலில் எரிந்த தீயை அணைக்க கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர். காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu