கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு 

March 28, 2023

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு விவரங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் கடந்த 3 ஆண்டுகளுக்கான இழப்பீடு விவரங்களை பட்டியலாக கொடுத்திருந்தார். இதன்படி 2020-2021, 2021-2022, 2022-2023 […]

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு விவரங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் கடந்த 3 ஆண்டுகளுக்கான இழப்பீடு விவரங்களை பட்டியலாக கொடுத்திருந்தார். இதன்படி 2020-2021, 2021-2022, 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.3,83,656 கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு முறையே ரூ.11,142 கோடி, ரூ.6697 கோடி, ரூ.16,215 கோடி என மொத்தம் ரூ.34,054 கோடி வழங்கப்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு ரூ.607 கோடி, ரூ.329 கோடி, ரூ.723 கோடி, ரூ.1,659 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu